<டெல்லியில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை - தலைமை காவலர் ஒருவர் உயிரிழப்பு
" alt="" aria-hidden="true" />

 

டெல்லி:

 

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. தலைநகர் டெல்லியில் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் சிஏஏ ஆதரவு போராட்டங்களும் நடைபெறுகின்றன.

 

இந்நிலையில், டெல்லியின் மாஜ்பூர் பகுதியில் இன்று நடைபெற்ற சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் தலைமை காவலர் ஒருவர் உயிரிழந்தார்.


 

கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றியவர் ரத்தன் லால். இவர் சிஏஏ எதிர்ப்பு போராட்டம் நடைபெற்ற பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போராட்டக்காரர்கள் போலீசார் மீது கற்களை வீசியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்தார். 


 

இதையடுத்து டெல்லியின் வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது குடும்பத்தார் ஆகியோர் இன்று மாலை டெல்லியில் உள்ள ஆக்ராவிற்கு சென்று தாஜ்மகாலை பார்வையிடுகின்றனர்.  இதன் காரணமாக டெல்லி மாநகரில் மேலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Popular posts
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
மதனாஞ்சேரியில் திமுக இளைஞர் அணி சார்பில் 250 குடும்பங்களுக்கு ரூபாய் 1000 மதிப்புள்ள மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கபட்டன
Image
ஆப்கானிஸ்தானில் ஒரு வார கால சண்டை நிறுத்தம் - தலீபான்களுடன் 29-ந் தேதி ஒப்பந்தம்
Image
திருவண்ணாமலை மலை சுற்றும் பாதையில் சிவனடியார்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
Image
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்னாமலை ஊராட்சி பகுதியில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது
Image